முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இராஜதந்திரிகளுக்கு பயிற்சி அளிக்க ஐ.நா.வுடன் விசேட ஒப்பந்தம்

ஐக்கிய நாடுகளின்(UN) பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் இலங்கையின் இராஜதந்திரிகளுக்கு விசேட பயிற்சியளிக்கும் திட்டம் தொடர்பில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சுக்கு இடையில் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

இது 03 வருட காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எனவும்,  கூட்டு வேலை கட்டமைப்பொன்று இதன்மூலம் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உத்தேசிக்கப்பட்டுள்ள வளங்கள்

மேலும், கையொப்பமிட உத்தேசிக்கப்பட்டுள்ள வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பரஸ்பர நன்மைகள் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இராஜதந்திரிகளுக்கு பயிற்சி அளிக்க ஐ.நா.வுடன் விசேட ஒப்பந்தம் | An Agreement With The Un To Train Diplomats

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், பயிற்சி மற்றும் கற்றல் ஆதரவு, இராஜதந்திரிகளுக்கு பயிற்சி, பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் நெருக்கடி மேலாண்மை மற்றும் புவி-தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு ஆகியவை ஐக்கிய நாடுகள் சபையிடம் இருந்து கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக நிலையான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவது தொடர்பான செயற்திட்டங்கள் இதற்குள் அடங்குவதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் மாநாட்டில் சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்