பிரேசிலுள்ள சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்துள்ளது.
குவைபாவில் வீசிய பலத்த காற்று காரணமாக இவ்வாறு சிலை சிலை சரிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புயல் பேரழிவு
பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலத்தில் புயல் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், பிரேசில் நேரப்படி பிற்பகல் மூன்று மணியளவில் மணிக்கு 90 கிலேமீற்றர் வேகத்தில் வீசிய கடுமையான காற்று மற்றும் புயல் காரணமாக குவைபா நகரில் உள்ள ஹவன் சில்லறை விற்பனைக் கடையின் முன் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய சுதந்திர தேவி சிலை திடீரென சரிந்து விழுந்துள்ளது.
இந்தநிலையில், சிலர் சிலை இடிந்து விழுந்த காட்சியைப் காணொளியாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளதுடன் அவை தற்போது வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







