இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜா நடிப்பில் 2002ல் வெளிவந்த திரைப்படம் வருஷமெல்லாம் வசந்தம். இப்படத்தை ரவி ஷங்கர் இயக்கியிருந்தார்.
அனிதா ஹசானந்தனி
குணால், நம்பியார், மயில்சாமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அனிதா ஹசானந்தனி அறிமுகமானார். இதன்பின் சுக்ரன், நாயகன், மகாராஜா ஆகிய படங்களில் நடித்தார்.


சீரியலில் பிரபல நடிகருடன் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதி.. வைரலாகும் வீடியோ
2016ம் ஆண்டிற்கு பின் சினிமாவிலிருந்து விலகி இருந்த நடிகை அனிதா ஹசானந்தனி கடந்த 2022ல் ஹிந்தியில் வெளிவந்த Maarrich படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார்.
நடிகை அனிதா ஹசானந்தனி கடந்த 2013ம் ஆண்டு ரோஹித் ரெட்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க
இந்த நிலையில், தமிழ் சினிமா பக்கம் பல ஆண்டுகளாக தலைகாட்டாமல் இருக்கும் நடிகை அனிதா ஹசானந்தனியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் நடித்த நடிகையா இது என கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..





