DD Next Level
தில்லு துட்டு படத்தின் மூலம் மாபெரும் வெற்றியடைந்த சந்தானம், தொடர்ந்து ஹாரர் காமெடி கதைக்களத்தில் படம் நடித்து வந்தார். தில்லு துட்டு 2, DD Returns ஆகிய படங்களின் வரிசையில் தற்போது DD Next Level வெளியாகியுள்ளது.
இப்படத்தை எஸ். பிரேம் ஆனந்த் இயக்கியிருந்தார். இப்படத்தில் கீத்திகா டிவாரி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் கவுதம் மேனன், மொட்டை ராஜேந்திரன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


3 நாட்களில் மாமன் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த வாரம் திரைக்கு வந்த DD Next Level திரைப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்பதே பெரும்பான்மையான விமர்சனமாக இருக்கிறது.
வசூல்
இந்த நிலையில், 3 நாட்களில் DD Next Level படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 8 கோடி வசூல் செய்துள்ளது. இது மிகவும் குறைவான வசூல் என்றும், பாக்ஸ் ஆபிஸில் இப்படம் அடிவாங்கியுள்ளது என கூறுகின்றனர்.


