முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கு மாகாண கால்நடைப் பண்ணையாளர்களுக்கு வெளியான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட “டித்வா” அனர்த்த நிலைமையினால்
பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர்களுக்கு நிதி
நிவாரணம் வழங்குவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலக்கம் 08/2025 வரவு செலவுத் திட்ட சுற்றுநிருபத்தின் பிரகாரம் இந்த நிவாரணம்
வழங்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால், பாதிக்கப்பட்ட
பண்ணையாளர்களுக்கான சேத விபரங்களை உறுதிப்படுத்தல் மற்றும் மதிப்பீடு செய்யும்
பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நிவாரணம்

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகங்களில் பதிவு
செய்யப்பட்டுள்ள 2025 நவம்பர் “டிட்வா” அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து
கால்நடைப் பண்ணையாளர்களும் இந்த நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ளத்
தகுதியுடையவர்களாவர்.

கிழக்கு மாகாண கால்நடைப் பண்ணையாளர்களுக்கு வெளியான அறிவிப்பு | Announcement Livestock Farmers I Eastern Province

நிவாரணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக, பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் செய்ய வேண்டிய
முக்கிய நடவடிக்கைகளாவன,

உங்கள் பிரதேசத்திற்குப் பொறுப்பான அரச கால்நடை வைத்திய அதிகாரி அல்லது
கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியரை உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.

அனர்த்தத்தினால் உங்கள் கால்நடைப் பண்ணை, பண்ணைக் கட்டிடங்கள் மற்றும்
உபகரணங்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்குத் தேவையான சரியான தகவல்களை
அவர்களுக்கு வழங்கவும்.

அனர்த்த சேத விபரங்களை அறிக்கையிடுவதற்கான இறுதித் திகதி 2025 டிசம்பர் மாதம்
15 ஆம் திகதியாகும்.

மேலதிக விபரங்கள்

நிவாரணத் திட்டத்தை முறையாகவும் விரைவாகவும் செயல்படுத்துவதற்காக,
பண்ணையாளர்கள் மேற்குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் உரிய அதிகாரிகளிடம் தகவல்களை
வழங்குவதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி
சுகாதாரத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.

கிழக்கு மாகாண கால்நடைப் பண்ணையாளர்களுக்கு வெளியான அறிவிப்பு | Announcement Livestock Farmers I Eastern Province

மேலதிக விபரங்களுக்கு பண்ணையாளர்கள் தங்கள் மாவட்டப் பிரதிப்பணிப்பாளர்களைத்
தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட பண்ணையாளர்கள் வைத்தியர்
எம். ஜே. நௌஷாட் ஜமால்தீன் ( 075 063 8538 ), மட்டக்களப்பு மாவட்ட
பண்ணையாளர்கள் வைத்தியர் எம். ஏ. ஹாதி ( 077 360 1322 ),
திருகோணமலை மாவட்ட பண்ணையாளர்கள் வைத்தியர் ஷிபாயா நௌஷாட் (077 353 0847)
ஆகியோருடன் தொடர்பு கொள்ளுமாறு கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத்
திணைக்களம் பணிப்பாளர் வைத்தியர் எம். ஏ. எம். சுல்பிகார் அபூபக்கர்
கேட்டுக்கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.