2024–2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வரி வருமானத்தை முதல் ஆளாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தாக்கல் செய்துள்ளார்.
உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின், புதிய இணையம் மூல வரித்தளம் இன்று(02.06.2025) காலை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன்போது, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முதல் ஆளாக, 2024–2025 மதிப்பீட்டு
ஆண்டிற்கான வரி வருமானத்தை தாக்கல் செய்தார்.

செலவினங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்
இந்த நிலையில், பொது நிதியைப் பாதுகாக்கும் நோக்கில், ஜனாதிபதியின் வரவுசெலவுத் திட்டத்திற்குள் செலவினங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள்
அறிமுகப்படுத்தப்படும் என்று, ஜனாதிபதி, இதன்போது அறிவித்துள்ளார்.

