மேன்முறையீட்டு நீதிபதிக்கான பதவி உயர்வு குறித்து நீதிபதி இளஞ்செழியனுக்கு (Manickavasagam Ilancheliyan) அநுர அரசு (Anura Government) திட்டமிட்டு அநீதி இழைத்துள்ளதாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டி வருகிறது.
இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் தற்துணிவாக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த மக்களை ஆற்றுப்படுத்திய ஒருவராக நீதிபதி இளஞ்செழியன் காணப்படுகிறார்.
நீதிபதி இளஞ்செழியன் தனது 27 ஆண்டுகால நீதித்துறையின் பதவிக் காலத்தில் பல்வேறு தீர்ப்புகளை அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் வழங்கியதால் இலங்கை மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார்.
ஆனால் அவருக்கான பதவிகள் அந்தந்தக் காலகட்டத்தில் வழங்கப்படாது அரசுகளால் திட்டமிட்ட வகையில் தட்டிக்களிக்கப்பட்டு வந்தது. இதன் உச்சமாக தற்போது அநுர அரசும் தகுதிகள் அனைத்தும் இருந்து திட்டமிட்டு அவரது பதவி உயர்வை தடுத்து ஓய்வு நிலைக்கு தள்ளியது.
இதேவேளை இலங்கை தீவின் முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றங்களைச் செய்ய பாதாள உலக நபர்களைப் பயன்படுத்தியுள்ளதாக தற்போது நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன கோனாவாலா சுனிலை என்ற பதாள குழு நபரை வைத்து உயர் நீதிமன்ற நீதிபதியின் வீட்டின் மீது கல் எறிந்தாகவும் மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச பத்திரிகையாளர் ரிச்சர்ட் டி சொய்சாவைக் கடத்தி கொலை செய்ய பாதாள உலக நபர்களைப் பயன்படுத்தியதகாவும் பிரதி அமைச்சர் அமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
இந்நிலையில், இளஞ்செழியன் போன்றவர்கள் மக்களால் நேசிக்கப்படுகின்ற ஒருவர் தமிழ் மக்களைத் தலைமை தாங்க முன்வர வேண்டும் என்பதே சில சிவில் சமூக அமைப்புக்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.
மேலும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இளஞ்செழியன் அவர்களை அரசிலுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுவருவதையும் காணமுடிகிறது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை தாங்கி வருகிறது ஐபிசி தமிழின் “செய்தி வீச்சு”.
https://www.youtube.com/embed/ogNK-JbMoqs

