முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சஜித்- நாமல் கூட்டணியை கடுமையாக விமர்சித்த அநுர…!

இலங்கையை சிறந்த நாடாக மாற்றுவதை, பிரதான நோக்கமாக கொண்டு, நாட்டு மக்களின்
ஒன்றுபட்ட விருப்பத்துடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கப்பட்டது
என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கை மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்த எதிர்பார்ப்புகளை எந்த
வகையிலும் சிதைக்க அனுமதிக்கபோவதில்லை என்று அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடனான சந்திப்பின் போது ஜனாதிபதி
இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் கலாசாரம்

இலங்கையில் ஒரு புதிய அரசியல் கலாசாரம் தற்போது நிறுவப்பட்டுள்ளது என்று,
ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன்,முதல் முறையாக, மக்களின் விருப்பமும் ஆட்சியாளர்களின்
விருப்பமும் உள்ள ஒரு அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர்
வலியுறுத்தியுள்ளார்.

சஜித்- நாமல் கூட்டணியை கடுமையாக விமர்சித்த அநுர...! | Anura Strongly Criticized The Sajid Namal Alliance

முற்போக்கான அரசியல் முயற்சிகளுக்கு மத்தியில், ஏனைய விரோதக் குழுக்கள்
தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபடலாம்.

என்றாலும், அவர்களின் ஒற்றுமை தேசிய நலனிலிருந்து அல்ல, மாறாக அவர்களின் சொந்த
ஊழல், மோசடி மற்றும் குற்றங்களை மறைக்கும் விருப்பத்திலிருந்து உருவாகிறது
என்பதை மறந்துவிடக் கூடாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.  இலங்கையில் முதன்முறையாக, இந்த தீவிர அரசியல் பிளவு இன்று உருவாகி வருகிறது.

சஜித்- நாமல் கூட்டணி

முற்போக்கான மற்றும் நல்ல அரசியல் பணிகள் முன்னேறும்போது, ​​எதிரெதிர்
விரோதக் குழுக்கள் ஒன்றுபட, தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைக்கின்றன.

வேறு முகாம்களில் உள்ள, திஸ்ஸ அத்தநாயக்க, தலதா மற்றும் சாகர காரியவசம்
ஆகியோர் ஒரே முகாமில் கூடியுள்ளனர்.

வேறு எதற்காகவும் அல்ல, அவர்களின் கடந்தகால ஊழல், மோசடி மற்றும் குற்றங்களைப்
பாதுகாக்கவே, அவர்கள் கூடியுள்ளனர்.

சஜித்- நாமல் கூட்டணியை கடுமையாக விமர்சித்த அநுர...! | Anura Strongly Criticized The Sajid Namal Alliance

அரசியல் ரீதியாகப் பார்த்தால், சஜித் பிரேமதாச மற்றும் நாமல் ல் ராஜபக்ஷ
இடையேயான கூட்டணி நாமலுக்கும், சஜித்துக்கும் தீங்கு விளைவிக்கும் ஒன்றாகவே
இருக்கும்.

ஆனால் அவர்கள் பிரிந்து இருப்பது எந்த வகையிலும் பாதகமாக இருக்கும் என்று
நம்புகிறார்கள்.

எனவே, அவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றுபட விரும்புகிறார்கள்.

இதற்காக, தங்களுக்கு இடையே உள்ள நீண்டகால அரசியல் முரணை அவர்கள்
புறக்கணிக்கிறார்கள்.

குறுகிய காலத்தில் – இந்த குறிப்பிட்ட தருணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு
எதிராக ஒன்றுபடுவது அவர்களின் சொந்த அரசியல் உயிர்வாழ்விற்கு அவசியம் என்று
அவர்கள் நம்புகிறார்கள்.

எனினும், அவர்கள் என்ன செய்தாலும், அவர்கள் ஊழல் நிறைந்த நபர்களாவர்

இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு எதிரான எந்தவொரு விசாரணையையும்
குறைமதிப்பிற்கு உட்படுத்த அரசாங்கம் அனுமதிக்காது

இது தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய கட்டளை என்றும் ஜனாதிபதி
குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.