விசா பிரச்சினைக்கு நீதித் தீர்வு கிடைக்கும் வரை நாட்டுக்கு வந்த பிறகு விசா வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்றையதினம் (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இதற்கு திட்டத்தை இலகு படுத்தும் முகமாக விமான நிலையத்தில், விசா பெறும் இடங்கள் (விசா கவுண்டர்கள்) 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தின் தடை
ஒரே நேரத்தில் பல விமானங்கள் வரும்போது, வரிசைகள் உருவாகுவதாகவும் இந்த நிலையை குறைக்க, தற்போதுள்ள விசா பெறும் இடங்கள் மேலதிகமாக 12 விசா பெறும் இடங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவத்துள்ளார்.
வி.எப்.எஸ் குளோபல் நிறுவனத்தின் விசா வழங்கும் நடவடிக்கைக்கு நீதிமன்றத்தின் தடை காரணமாக, வெளிநாட்டவர்களுக்கு இலங்கைக்கு வந்த பிறகு 30 நாட்கள் அல்லது 60 நாட்களுக்கு விசா வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
வி.எப்.எஸ் குளோபல் நிறுவனம் மூலம் கடந்த மாதம் விசா வழங்கல் நடைமுறைப்படுத்தப்பட்ட போது மாத்திரம், சுமார் ஒரு லட்சத்து எண்பத்தொன்பதாயிரம் சுற்றுலாப் பயணிகள் வந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.