Courtesy: H A Roshan
தீர்மானங்கள் நிறைவேற்றுதல் முன்னுரிமை அடிப்படையில் இருக்க வேண்டுமன்றி அரசியலாக இருக்க கூடாது என பிரதியமைச்சர் அருண் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.
தம்பலகாமம் பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதன்போது, தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள், குறைபாடுகள் மற்றும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.
முதலாவது கூட்டம்
குறிப்பாக மனித யானை மோதல், வீதி அபிவிருத்தி, இயற்கை அனர்த்தத்தின் போதான வடிகான் நிலவரம், சட்ட விரோத மண் அகழ்வு, விவசாயிகளுக்கான பசளை, கல்வி சுகாதாரம் என பல முக்கிய தீர்மானங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றதன் பின் குறித்த முதலாவது கூட்டம் இதுவாகும்.
குறித்த கூட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதி செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட திணைக்கள பொறுப்பதிகாரிகள் துறைசார் அரசாங்க உத்தியோகத்தர்கள், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், சண்முகம் குகதாசன் ஆகியோர்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.