சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு (srilanka) கொண்டு வர முயற்சித்த கட்டுநாயக்க விமான நிலைய (Bandaranaike International Airport) பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, விமான நிலையத சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போது, கைப்பற்றப்பட்ட பிஸ்கட்டுகளின் அளவு 2 கிலோவுக்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், நான்கு மில்லியன் ரூபா பெறுமதியான 18 தங்க பிஸ்கட்டுகளை அவர் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
மாத்தறை, ஹக்மன பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதான விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர், 15 வருடங்களாக சேவையில் ஈடுபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட விமான நிலைய பாதுகாப்பு பரிசோதகர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.