பிக் பாஸ் 8வது சீசன் நேற்று தான் தொடங்கியது. விஜய் சேதுபதி ஒவ்வொரு போட்டியாளராக அறிமுகப்படுத்தி வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.
மகாராஜா படத்தில் அவர் மகளாக நடித்த சாச்சனாவும் போட்டியாளராக வந்திருக்கிறார். அவர் தன்னை அப்பா என்று கூட ஷோவில் அழைக்கலாம் என விஜய் சேதுபதி கூறி இருந்தார்.
பிக் பாஸ் போட்டியாளர்கள் எல்லோரும் உள்ளே போன பிறகு அனைவருக்கும் ஒரு அதிர்ச்சி கொடுத்தார் விஜய் சேதுபதி. 24 மணி நேரத்தில் ஒரு எலிமினேஷன் இருக்கிறது என்பது தான் அது.
சாச்சனா சொன்ன வார்த்தை.. எலிமினேஷன் காரணம்
இரண்டாவது ஆளாக பிக் பாஸ் வீட்டுக்கு சென்றார் சாச்சனா. பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு நிலையில் ஆண்களுக்கு எந்த பக்கம், பெண்களுக்கு எந்த பக்கம் என முடிவெடுக்கும் இடத்தில் சாச்சனாவும் இருந்தார்.
நாங்கள் பெரிய அறையை உங்களுக்கு விட்டுக்கொடுக்கிறோம், ஆனால் அதற்கு பதில் ஒரே ஒரு வாரம் மட்டும் ஆண்களை பெண்கள் யாரும் நாமினேட் செய்யக்கூடாது என கண்டிஷன் போட்டனர். அதற்கு பெண்களும் ஒப்புக்கொண்டு டீல் போட்டனர். ஆனால் அதற்கு பின் வந்த ஜாக்குலின் அந்த கண்டிஷனை ஏற்றுக்கொள்ளவே முடியாது என பிடிவாதமாக இருந்தார்.
இன்று சாச்சனா பேசும்போது ‘அந்த முடிவு எடுத்த பெண்கள் 4 பேரில் நானும் ஒருத்தி. ஒருவேளை பெண்களை மட்டும் நாமினேட் செய்யும் நிலை வந்தால், ஒரு பெண் வெளியே போக வேண்டும். 24 மணி நேரத்தில் அது நானாக இருந்துகொள்கிறேன்’ என கூறினார்.
அதன் பிறகு 24 மணி நேர எலிமினேஷனுக்கு பலரும் அதை காரணம் காட்டி நாமினேட் செய்தனர். அதிகம் பேர் நாமினேட் செய்த அவர் எலிமினேட் செய்யப்பட்டார்.
இப்படி விட்டுக்கொடுக்க தான் பிக் பாஸ் வந்தாரா என நெட்டிசன்கள் தற்போது சாச்சனாவை விமர்சித்து வருகின்றனர்.