குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் நாளுக்கு நாள் வசூலில் வேட்டையாடி வருகிறது.
கடந்த வாரம் வெளிவந்த இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.


என் திருமணம் குறித்து தயவுசெய்து அப்படி சொல்லாதீர்கள், நான் அப்படி இல்லை.. நடிகை ரம்யா பாண்டியன் புலம்பல்
த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரியா வாரியர் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.
வசூல் விவரம்
அந்த வகையில், குட் பேட் அக்லி திரைப்படம் உலகளவில் 10 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, மாஸ் வெற்றியடைந்துள்ள இப்படம் உலகளவில் 10 நாட்களில் ரூ. 228 கோடி வசூல் செய்துள்ளது.


