முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அதிர்ச்சியில் இரசிகர்கள் – வெளியேறிய பிரேசில் அணி: கண்ணீர் விட்ட நெயமர்

பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நோர்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

1990 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாகப் பிரேசில் அணி காலிறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியுள்ளது.

பிரேசில் அணியின் உலகக்கோப்பை கனவு கலைந்த வேளையில், நெய்மாரின் கண்ணீர் ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் இதயத்தையும் உடைத்துள்ளது.

விறுவிறுப்பான சுற்றுகள் 

உலகக் கிண்ண 2026 கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்றுகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதிர்ச்சியில் இரசிகர்கள் - வெளியேறிய பிரேசில் அணி: கண்ணீர் விட்ட நெயமர் | Brazil Is Out Of The 2026 Fifa World Cup

இன்று நடைபெற்ற ‘ரவுண்ட் ஆஃப் 16’ (Round of 16) தகுதிச் சுற்றுப் போட்டி நியூயோர்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்றது.

போட்டியின் 79-வது நிமிடத்தில் நோர்வே அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலந்த் (Erling Haaland) முதல் கோலை அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

தொடர்ந்து ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் அவர் அடித்த மற்றொரு கோல் நோர்வேயின் வெற்றியை உறுதி செய்தது.

ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+10′ நிமிடத்தில்) பிரேசில் அணியின் நெய்மார் (Neymar) பெனால்டி வாய்ப்பின் மூலம் ஒரு கோல் அடித்தார்.

கண்ணீருடன் மைதானத்தில் சரிந்த நெயமர்

இந்த வெற்றியின் மூலம் நோர்வே அணி முதன்முறையாக உலகக் கிண்ணத்தின் காலிறுதிப் போட்டிக்கு (Quarter-finals) தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

அதிர்ச்சியில் இரசிகர்கள் - வெளியேறிய பிரேசில் அணி: கண்ணீர் விட்ட நெயமர் | Brazil Is Out Of The 2026 Fifa World Cup

உலகத்தரம் வாய்ந்த , பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மருக்கு, இதுவே கடைசி உலகக்கோப்பைத் தொடராக மாறியுள்ளது.

இறுதி விசில் ஒலித்ததும் நெயமர் கண்ணீருடன் மைதானத்தில் சரிந்து விழுந்தார். பின்னர் அவரது சக வீரர்கள் அவரை ஆறுதல் கூறினர்.

“நான் முயற்சி செய்தேன், முயற்சி செய்தேன். இப்போது எல்லாம் முடிந்துவிட்டது” என்று அவர் குளோபோவிடம் தெரிவித்தார்.

“நான் இங்கேயே தொடங்கினேன்; இங்கேயே முடித்துவிட்டேன்” என்றார். 

Source: https://ibctamil.com/article/brazil-is-out-of-the-2026-fifa-world-cup-1783305116

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.