முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வட கிழக்கு மக்களின் போராட்டம்: அநுர தரப்பிடம் கேள்வியெழுப்பும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னெடுக்கும் ஒரு போராட்டத்திலாவது தேசிய மக்கள் சக்தி தரப்பினர் கலந்து கொண்டுள்ளனரா
என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

நிகழ்வொன்றில் நேற்றையதினம் (27) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடக்கின்றது. இந்த 15
வருடங்களில் எமது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

ஜே.வி.பி தரப்பினர் 

வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் நாளாந்தம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் ஒரு போராட்டத்திலாவது ஜே.வி.பி கலந்து கொண்டுள்ளதா? வடக்கு
கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் இடம்பெற்று
வருகின்றது. 

வட கிழக்கு மக்களின் போராட்டம்: அநுர தரப்பிடம் கேள்வியெழுப்பும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Tamil National Alliance Rejects Unitary Rule

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தனியார் காணிகள் அபகரிப்பிற்கு எதிராக பாதிக்கப்பட்ட எமது மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவற்றில் ஏதாவது ஒன்றிலாவது இந்த ஜே.வி.பி தரப்பினர்
அல்லது தேசிய மக்கள் சக்தி என கூறப்படுகின்றவர்கள் கலந்து
கொண்டுள்ளார்களா? இல்லை.

இடைக்கால அறிக்கையை நாடாளுமன்ற பொதுத் தேர்தல்
நிறைவடைந்த பின்னர் நிறைவேற்றுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இலங்கையின் பிரதான அமைப்பாக அரசியல் அமைப்பு காணப்படுகிறது. அந்த அரசியல்
அமைப்பை மூன்று தடவை கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்று அரசியல்
அமைப்பையும் எமது மக்கள் நிராகரித்தனர்.

நாட்டின் பிரதான சட்டத்தை இரண்டாவது இனம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது
என்றால் அதற்கான அர்த்தம் அந்த இனத்திற்கு ஓர் இனப் பிரச்சினை உள்ளது
என்பதேயாகும்.

சர்வதேச சமூகம் 2012 ஆம் ஆண்டில் இருந்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில்
நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு தீர்மானங்களையும் தெளிவாக வலியுறுத்துகின்றது. இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்று.

தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியலமைப்பை நிறைவேற்ற வேண்டும்.

ஒற்றையாட்சி அரசியல் 

அப்படி
கூறுகின்றபடியால் போருக்கு பின்னர் ஒரு தீர்வு காண்பதற்கான நாடகமாவது இங்கு
நடிக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டது.

வட கிழக்கு மக்களின் போராட்டம்: அநுர தரப்பிடம் கேள்வியெழுப்பும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Tamil National Alliance Rejects Unitary Rule

ஒரு தீர்வில்லாத யோசனை கொண்டு வந்தால் அதை தமிழ் மக்கள்
நிராகரிப்பார்கள்.

நிராகரித்தால் இனப்பிரச்சினை தொடர்ந்து இருக்கும், அப்படி
தொடர்வதாக இருந்தால் சர்வதேச மட்டத்தில் தமக்கு தேவையற்ற அழுத்தங்கள் வரும்
என்கிற ஒரு பிடியாவது நாங்கள் இன்று வைத்துள்ளோம்.

அந்த பிடியை இல்லாமல் செய்வதற்கு தான் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு கொண்டு
வரப்பட்டு, வடக்கு கிழக்கில் சரித்திரத்தில் முதல் தடவையாக எங்களுடைய
நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய பெரும்பான்மை ஆதரவோடு, அதை நிறைவேற்றி உலகத்திற்கே
தமிழ் மக்கள் இந்த அரசியல் அமைப்பை ஆதரித்து விட்டார்கள் என்ற ஒரு செய்தியை
காட்டுவதற்கு முயல்கின்றார்கள்.

இதுதான் எமக்கு இருக்கின்ற ஒரு மிகப்பெரிய சவால்.ஒற்றையாட்சி அரசியலமைப்பை
நாங்கள் நிராகரிப்பதாக இருந்தால் அதனை நிராகரிக்கக்கூடிய,செயல்படுத்தக்கூடிய
ஒரு அணியாக இந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12

Source: https://ibctamil.com/article/tamil-national-alliance-rejects-unitary-rule-1730063678?itm_source=parsely-popular

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.