தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வெற்றிடம் இருக்கும் போது எதற்காக பௌத்த பிக்குகளை ஏன் கட்சிகளுக்கு கொண்டு வர வேண்டும் என ஊடகவியலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான ஏ.ஆர்.வி.லோஷன் (A.R.V Loshan) கேள்வியெழுப்பியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) இரண்டு பௌத்த பிக்குகளை தேர்தலில் நிறுத்தியுள்ளார்.
நான் இனவாதம் பேசுபவன் இல்லை இருப்பினும் சிங்கள கட்சிகளே பௌத்த பிக்குகளை தங்களது கட்சிகளில் அனுமதிப்பது இல்லை ஆனால் டக்ளஸ் தேவானந்தா எதற்காக இதை செய்கின்றார்.
இதன் மூலம் யாருடைய வாக்குகளை அவர் சிதறடிக்க பார்க்கின்றார்” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், தேசிய மக்கள் சக்தி அரசியல் களம், மற்றும் அரசியல் மாற்றம் மற்றும் அநுர குமாரவின் ஆட்சி என்பவை தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்துக்களை காண நேர்காணலை பார்வையிடுங்கள்,
https://www.youtube.com/embed/eK17FJcxbDg