இந்த ஆண்டு கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், ஏழ்மையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.