கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பாப்பரசராகியிருந்தால் இலங்கையும் ஒரு வத்திக்கான் ஆக மாற்றப்பட்டிருக்கும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நீங்கள் சொன்னாலும் நான் பயமில்லை. தூக்கில் தொங்கவும், சிறைச்சாலைகளுக்கு செல்லவும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றுள்ள இராணுவத் தளபதி நியமனம் மற்றும் அவரின் பதவிகாலம் நீடிக்கப்பட்டது தொடர்பில் பின்புலமாக செயற்படுபவர் யார் என அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.