தொப்பி வியாபாரியின் கதையைப் போல குரங்குகளின் கதை இப்பொழுது உலகம் முழுவதும் சென்றிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் (Chamara Sampath Dassanayake) தெரிவித்ததை அடுத்து வலுசக்தியமைச்சர் குமார ஜெயக்கொடி அதற்குப் பதிலளிக்க முற்பட்டபோது சபையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மேலும் உரையாற்றிய சாமர சம்பத் எம்.பி, வாயை மூடி இரு என வலுசக்தி அமைச்சரை நோக்கி தமிழில் திட்டியுள்ளார்.
கேள்வி எழுப்பிய சாமர
மின்வெட்டு சம்பவம் நடந்த போது நீங்கள் அங்கு தான் இருந்தீர்கள். அங்கு குரங்கு வந்த பொழுது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதனை நான் சொல்ல விரும்பவில்லை.
நீங்கள் தேடிப்பார்க்காமல் தான் அந்த குரங்கினுடைய செய்தியை சொன்னீர்கள். ஒரு அமைச்சர் என்ற வகையில் நீங்கள் அவ்வாறு நடக்கக்கூடாது.
கடந்த18 ஆம் திகதி மின்சார சபை இந்த விடயம் குரங்கினால் நடைபெற்றது அல்ல என்று ஒரு அறிவிப்பை விடுத்திருக்கிறார்கள்.
அதனை நான் சபைக்கு ஆற்றுப்படுத்துகிறேன்.
ஞாயிற்றுக்கிழமை அதிகமான மின்னழுத்தம் இருந்தது.
நீர்மின் நிலையங்களில் நீர் உற்பத்தி செய்யப்படுகிறது. நுரைச்சோலையினுடைய மின்சாரம் வருகிறது.
இந்த சூரிய சக்தி மின் உற்பத்தியோடு செயற்படும்பொழுது அழுத்தம் அதிகமாகிறது எள்றும் குறிப்பிட்டுள்ளார்.