என்னை பதவியில் இருந்து விலக்க நினைக்கின்றீர்கள் என்றால் அதை நீங்கள் செய்ய வேண்டாம், நானே விலகிக் கொள்கின்றேன் என சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர் அர்ச்சுனா (Archuna) தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைத்தளத்தில் அவர் இன்று வெளியிட்டுள்ள காணொளியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் அதிகாரிகள் பலர் விலை போயுள்ளதாகவும் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களுக்காக போராடிய தன்னிடம் விசாரணை
சாவகச்சேரி வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) கடைசி மூன்று நாட்களும் தனிமனிதனாக மக்களுக்காக போராடிய தன்னை விசாரணைக்கு அழைத்துள்ளமை யாழில் மனித உரிமை ஆணைக்குழுவின் (Human Rights Commission) செயலிழந்த நிலையையே காட்டுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், விடுதலை புலிகள் என தன்னை குறிப்பிடுவது பெருமை என்றும் காணாமல் ஆக்கப்பட்ட 44, 000 பேருடன் என்னையும் ஒருவன் என சொன்னால் அது எனக்கு பெருமிதமே என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள காணொளியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
https://www.youtube.com/embed/Ha21tMRBw1I