முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாவகச்சேரி பிரதேச சபை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிடம்

யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை
சேர்ந்த பொன்னையா குகதாசன் திருவுளச் சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு
செய்வதற்கான அமர்வு இன்று (23) பிற்பகல் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்
தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஜனநாயக
தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனும், இலங்கைத் தமிழ்
அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசனும் முன்மொழியப்பட்டனர்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி

இதில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியை சேர்ந்த செல்வரத்தினம் மயூரனுக்கு
ஆதரவாக, அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த 5 உறுப்பினர்களும், ஜனநாயக
தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த 5 உறுப்பினர்கள் என மொத்தமாக 10
உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

சாவகச்சேரி பிரதேச சபை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிடம் | Chavakachcheri Pradeshiya Sabha Itak

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசனுக்கு ஆதரவாக,
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த 8 உறுப்பினர்களும், தமிழ் மக்கள்
கூட்டணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தலா ஒரு உறுப்பினர் என
மொத்தமாக 10 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸை
சேர்ந்த செல்வரத்தினம் ஆணந்தகுமார் ஏனும் உறுப்பினரும் வாக்களிப்பில்
கலந்துகொள்ளாது நடுநிலையாக செயற்பட்டனர்.

அத்தோடு அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த யோகநாதன் கல்யாணி எனும்
உறுப்பினருக்கு நீதிமன்றம் இடைக்கல தடை விதித்துள்ளது.

போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களும் தலா 10 வாக்குகளை பெற்ற நிலையில் திருவுளச்
சீட்டு மூலம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த பொன்னையா குகதாசன் தெரிவு
செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இடம்பெற்ற பிரதித் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸை
இராமநாதன் யோகேஸ்வரன் 11 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

28 உறுப்பினர்களை கொண்ட சாவகச்சேரி பிரதேச சபைக்கு, இலங்கைத் தமிழ் அரசுக்
கட்சி சார்பில் 8 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் 7
உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பில் 6 உறுப்பினர்களும், ஜனநாயக
தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் 5 உறுப்பினர்களும், தமிழ் மக்கள் கூட்டணி
மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தலா ஒரு உறுப்பினரும் நடந்து முடிந்த
தேர்தலில் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.