இலங்கைக்கு(sri lanka) வருகை தந்துள்ள சீன(china) மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசியக் குழுவின் துணைத் தலைவர் கின் போயோங் (Qin Boyong) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை(harini amarasuriya) நேற்று செவ்வாய்க்கிழமை (17)நாடாளுமன்றத்தில் சந்தித்தார்.
கின் போயோங் உள்ளிட்ட தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பாராட்டியதுடன் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
பல துறைகளில் இணைப்புகளை வலுப்படுத்தல்
நோய் கட்டுப்பாடு, நிலையான வளர்ச்சி மற்றும் பல துறைகளில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணைப்புகளை வலுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் மேலும் விவாதிக்கப்பட்டது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகவத்த, பிரதமரின் ஊடகச் செயலாளர் விஜித பஸ்நாயக்க, வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசியாவுக்கான பணிப்பாளர் நாயகம் எஸ். ருவந்தி டெல்பிட்டிய மற்றும் திணைக்களத்தின் பணிப்பாளர் உதானி குணவர்தன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.