உள்ளூராட்சி கட்டளைச் சட்டத்தின்படி, கொழும்பு மாநகர சபை நிர்வாகம் 14
நாட்களுக்குள் புதிய வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கும் வாய்ப்பைக்
கொண்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர சபையின் முதல் வரவு செலவு திட்டம் நேற்று தோல்வி கண்டதை அடுத்தே, இந்த
வாய்ப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் வரவு செலவுத் திட்டம்
உள்ளூராட்சி கட்டளைச் சட்டத்தின் கீழ் நிர்வாகம் ஒரு புதிய வரவு செலவு
திட்டத்தை கொண்டுவர அனுமதிக்கப்படுகிறது. அத்துடன், உள்ளூராட்சி அமைப்புகளுக்குப் பொறுப்பான அமைச்சருக்கு சட்டத்தால்
வழங்கப்பட்ட மூன்றாவது வரவு செலவு திட்டத்தை அங்கீகரிக்கும் அதிகாரம் உள்ளது
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி கொழும்பு மாநகர சபையின் முதல் வரவு செலவுத் திட்டத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது.
நேற்றையதினம்(2025.12.22) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 57 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் பதிவாகியுள்ளன.
முதல் வரவு செலவுத் திட்டம்
இதனால் 3 வாக்குகள் பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தியின் முதல் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்கது.

