ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தேர்தல் சட்டங்களை மீறுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உயர் நீதிமன்றின் உத்தரவினையும் மீறி புதிய மதுபான விற்பனை நிலைய உரிமங்களை நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்பய்பட்டுள்ளது.
புதிய உரிமங்கள்
இலங்கை மதுபான விற்பனை நிலைய அனுமதிப்பத்திரதாரிகளின் சங்கத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய உரிமங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் புதிதாக ஆறு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய ஜனாதிபதி நிதி அமைச்சராகவும் கடமையாற்றி வருவதாகவும் இதனால் அவரே மதுவரித் திணைக்களத்தின் பிரதானியுமாவார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.