உலகில் சுற்றுலாப் பயணிகள் பயணிக்க மிகச் சிறந்த முதல் 10 இடங்களுக்குள் இலங்கை (Sarilanka) தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
பிபிசி (BBC) டிராவல் வழிகாட்டியால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பயணம் செய்ய சிறந்த நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் அடிப்படையில் உலகில் பயணம் செய்ய சிறந்த 10 நாடுகளில் இலங்கை 9வது இடத்தை பிடித்துள்ளது.
நம்பமுடியாத பயண அனுபவங்கள்
மூடுபனி நிறைந்த மலையக தேயிலைத் தோட்டங்கள், சுற்றித் திரியும் காட்டு யானைகள், பண்டைய கோயில்கள் மற்றும் ரோலிங் சர்ஃப் ஆகியவற்றிற்கு புகழ்பெற்ற ஒரு வரவேற்பு நாடு என்று டிராவல் வழிகாட்டியில் விவரிக்கப்பட்டுள்ளது.
இது பார்வையாளர்களுக்கு நம்பமுடியாத பயண அனுபவங்களின் செல்வத்தை வழங்குகிறது.
மேலும், கண்டியில் முதல் ஏழு நட்சத்திர ஹெட்டல் நிர்மாணித்தல், கொழும்பில் 1 பில்லியன் அமெரிக்க டொலர் மெகா ஹெட்டல் நிர்மாணித்தல் மற்றும் இலங்கையை தூர கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைக்கும் புதிய விமான சேவையை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட இலங்கையின் பல அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் விபரித்துள்ளது.