முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய உடலங்கள் புதைக்கப்பட்டதாக
கூறப்படும் கிணறுகளை அகழ வலியுறுத்தி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை
முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக் கொணரப்படுவதுடன் பாதிக்கப்பட்ட
உறவுகளுக்கு நீதியும் பரிகாரமும் வழங்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் தனது மகனை பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்ரிபன் மரில்டா என்பவர்
வேலணை பிரதேச சபையின் உறுப்பினரான சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோரால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடு

அத்தோடு, குறித்த நபர்கள் வேலணை பிரதேச சபையின் ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் உறுப்பினரான அனுசியா ஜெயகாந்த், அகில இலங்கை தமிழ் கங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான கருணாகரன் நாவலன் மற்றும் திருனாவுக்கரசு சிவகுமாரன், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான செந்தமிழ்ச்செல்வன் திருக்கேதீஸ்வரன், தமிழரசுக் கட்சியின் உறுப்பினரான மங்களேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோரது பிரசன்னத்துடன் இருவேறு முறைப்பாடுகள் இன்று(4) ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.

35 வருடங்களுக்கு முன்னர் ஓகஸ்ட் மாதம் 25 மற்றும் 26 ஆகிய நாள்களில்
இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு,
அல்லைப்பிட்டி, மண்கும்பான் ஆகிய பகுதிகளில் பாரிய மனிதப் படுகொலை
நிகழ்த்தப்பட்டதாகவும், இதன்போது 80 இற்கும் அதிகமான இளைஞர்களும், யுவதிகளும்
காணாமலாக்கப்பட்டிருந்ததுடன் மேலும் பலர் கொல்லப்படும் இருந்தனர்.

மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! | Complaint Filed Digging Mandaitivu Burial Well

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 45 இற்கும் அதிகமான உடலங்கள் மண்டைதீவு 2
ஆம் வட்டாரப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருப்பதுடன் அதற்கான வாழும்
சாட்சியங்கள் உறுதியாகவும் இருக்கின்றன.

நீதியான விசாரணை

அதேபோன்று அதற்கு அயலில் உள்ள பாடசாலை
கிணறு ஒன்றுக்குள்ளும் உடலங்கள் இருக்கின்றன.

இந்தநிலையில் குறித்த படுகொலை சாட்சியமாக உறவுகளை பறிகொடுத்த
குறித்த கிணற்றை அகழ்ந்து உடலங்களை வெளிக்கொணர்ந்து உண்மைகள் வெளி உலகுக்கு
வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த முறைப்பாடு
பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மண்டைதீவு புதைகுழிக் கிணற்றை அகழ வலியுறுத்தி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு! | Complaint Filed Digging Mandaitivu Burial Well

முன்பதாக கடந்த மாதம் 20 ஆம் திகதி வேலணை பிரதேச சபையில் குறித்த புதைகுழியை
அகழ்ந்து உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி
முன்வைக்கப்பட்ட பிரேரணை சபையில் அனைத்து உறுப்பினர்களின் ஏக ஆதரவுடன்
நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.