முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாடாளுமன்றத் தேர்தல் நாளை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் நாளையதினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இன்று (13) காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நாளை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என அறிவிப்பு | Completed Election Planning Activities In Sl

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பிரதான தேர்தல் அலுவலகத்தில் இருந்து இன்று காலை முதல் வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி ஜே.ஜஸ்ரீனா முரளிதரன் தலைமையில் இந்த வாக்குப்பெட்டிகள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நாளை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என அறிவிப்பு | Completed Election Planning Activities In Sl

மட்டக்களப்பு இந்துக்கல்லூரியிலிருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 300க்கும் அதிகமான வாகனங்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

செய்தி-குமார்

யாழ்ப்பாணம்

வாக்குப் பெட்டிகள், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் இருந்து இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் நாளை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என அறிவிப்பு | Completed Election Planning Activities In Sl

வாக்குச் பெட்டியை ஏற்றியவாறு முதலாவது பேருந்து இன்று காலை 8.30 மணிக்கு புறப்பட்டுள்ளது.

இதன்போது, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரியபண்டார ஆகியோர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

இந்தநிலையில், யாழ் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட
தெரிவத்தாட்சி அலுவலகர் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நாளை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என அறிவிப்பு | Completed Election Planning Activities In Sl

யாழ். மாவட்டத்தில் 4 லட்சத்து 92 ஆயிரத்து
280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கிளிநொச்சியில் ஒரு லட்சத்து 907 வாக்களர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நாளை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என அறிவிப்பு | Completed Election Planning Activities In Sl

வாக்களிப்பு வியாழக்கிழமை (14) காலை 7 மணியில் இருந்து மாலை 4 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கெண்ணும் நடவடிக்கைகள் யாழ் மத்திய கல்லூரியில்
நாளை மாலை ஆரம்பிக்கப்படும்.

அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி- தீபன், கஜி

வன்னி – முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான 137 வாக்களிப்பு
நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து
அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நாளை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என அறிவிப்பு | Completed Election Planning Activities In Sl

வன்னி தேர்தல் தொகுதியில் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான
தேர்தலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 137 வாக்களிப்பு
நிலையங்களிற்கே இவ் வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் நாளை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என அறிவிப்பு | Completed Election Planning Activities In Sl

23 கட்சிகளும், 25 சுயேட்சை குழுக்களுமாக மொத்தமாக இம்முறை வன்னி தேர்தல்
தொகுதியில் 432 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு
அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள
நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு
மகாவித்தியாலயத்தில் இருந்து இன்று (13.11.2024) காலை 7 மணி முதல் வாக்கு
பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

செய்தி-சதீசன்

வவுனியா

நாளை இடம்பெறவுள்ள  நாடாளுமன்ற தேர்தலுக்காக வவுனியா சைவப்பிரகாச மகளிர்
கல்லூரியில் இருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்கு பெட்டிகள்
எடுத்துச் செல்லப்பட்டன.

நாடாளுமன்றத் தேர்தல் நாளை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என அறிவிப்பு | Completed Election Planning Activities In Sl

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல்
தொகுதியில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக வவுனியா மாவட்டத்தில் 128,585
பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 152 வாக்களிப்பு நிலையங்களில்
வாக்களிப்பு நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நாளை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என அறிவிப்பு | Completed Election Planning Activities In Sl

குறித்த வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப்
பெட்டிகள் காலை 7.30 மணிமுதல் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டுள்ளன.

தேர்தல் கடமைகளை இலகுபடுத்தும் முகமாக வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி
வாயிலின் முன்பகுதியில் பிரிவுக்களுக்கான வரைபடமும்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மற்றும் வாக்குச்
சாவடிப் பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

செய்தி-திலீபன்

நுவரெலியா

நாளை இடம்பெறவுள்ள பொது தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான
வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து
வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் நாளை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என அறிவிப்பு | Completed Election Planning Activities In Sl

நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் 605,292 பேர்
வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா – மஸ்கெலியா, கொத்மலை, ஹங்குராங்கெத்த,
வலப்பனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள்
வாக்களிக்கவுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நாளை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என அறிவிப்பு | Completed Election Planning Activities In Sl

மேலும், 65 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் அரச அதிகாரிகள் 10000 பேர் கடமையில்
ஈடுபட்டுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும்
2500 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்திற்கான 08 நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய 17
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேட்சை குழுக்களை
பிரதிநிதித்துவப்படுத்தி 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.

செய்தி-க.கிஷாந்தன்

பதுளை

பதுளை மாவட்டத்தில் 530 வாக்களிப்பு நிலையங்களில் 705772 பேர் வாக்களிக்க
தகுதிபெற்றுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நாளை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என அறிவிப்பு | Completed Election Planning Activities In Sl

அதன்படி, பதுளை மாவட்டத்தில் மஹியாங்கனை, வியழுவ, பசறை, பதுளை, ஹலிஎல, ஊவாபரணகம,
வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு
நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

மேலும், 69 வாக்கு எண்ணும்
நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த்கது.

செய்தி-திருமால்

மன்னார்

மன்னார் மாவட்டத்தில் சிறப்பான தேர்தலை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், தேர்தல் கடமைகளுக்காக 1603 அரச உத்தியோகத்தர்கள்
பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத் தேர்தல் நாளை! அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என அறிவிப்பு | Completed Election Planning Activities In Sl

மன்னார் மாவட்டச் செயலகத்தில் வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் 8
வாக்கு என்னும் நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படும்.

மேலும், நாளைய தினம் வியாழக்கிழமை(14) வாக்களிப்புகள் நிறைவடைந்த பின்னர் மாவட்டச்
செயலகத்தில் உள்ள வாக்கு என்னும் நிலையங்களுக்கு கொண்டு வரப்படும். 

செய்தி-ஆஷிக் 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.