நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான சதிமுயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார
பதுளையில் நடைபெற்ற இளைஞர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வௌியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
தொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், இம்முறை தேர்தலில் போட்டியிட பயந்து பலரும் ஒதுங்கிக் கொண்டுள்ள நிலையில், நான் நமது பிரதிநிதித்துவத்தைக் காப்பதற்காக துணிந்து போட்டியிட முன்வந்துள்ளேன்.
சதி முயற்சி
இம்முறை நாடாளுமன்றத்தில் நமது பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தடுப்பதற்காகவே ஐக்கிய மக்கள் குரல் கட்சியின் ஊடாக போட்டியிடுகின்றேன்.
இம்முறை நமக்கான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் இல்லாது போனால், எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள உளளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களின் போது அது எதிரொலிக்கும்.
எனவே நமது தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் வாக்களியுங்கள். அது வடிவேல் சுரேஷ் ஆகத் தான் இருக்க வேண்டுமென்பதில்லை. பொருத்தமான எவருக்கேனும் வாக்களியுங்கள் என்றும் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.