தேசிய மக்கள் சக்தி கட்சியின் மற்றுமொரு உறுப்பினர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க வெளிப்படுத்தியுள்ளார்.
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை (07.11.2025) ஜனாதிபதியால் முன்மொழியப்பட்டது.
இதனையடுத்து, குறித்த வரவு செலவு திட்டம் தொடர்பிலான விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
துரித விசாரணை
இந்த விவாதத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “தெஹிவளை- கல்கிசை நகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினரின் மகன் ஒரு மாதத்திற்கு முன்னர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்விடயம் இது வரையில் வெளிக்கொண்டு வரப்படவில்லை. குறித்த உறுப்பினர் பதவி விலகவுமில்லை.
இதேவேளை, பேலியகொடை நகர சபை உறுப்பினர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரிடம் சொத்துக்கள் உள்ளன அவை தொடர்பிலும் தீவிரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கட்சி பேதமின்றி இவற்றுக்கான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

