இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழர் தரப்பில் பெரும் அமளி துமளி நிலவி வருகின்றது.
இவ்வாறான பின்னணியில் தமிழர் தரப்பில் கட்சிகளின் நிலைப்பாடும், சுயாதீன குழுக்களின் ஆக்கிரமிப்பும் அதிகரித்துள்ளது.
இந்த தேர்தலினை தமக்கு இலாபமாக மாற்ற பல நகர்வுகளை பலர் முன்னெடுத்து வரும் நிலையில், சுமந்திரன் என்ற தனி மனிதனுடைய செயற்பாட்டின் விளைவு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணமாக மாறியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த வீழ்ச்சிக்கு பின்னர் தனக்கு கிடைக்கின்றவற்றினை வெற்றிகளாக அவர் கணக்கிட்டு வரும் நிலையில், அதனை ஒரு ஏமாளி கூட்டமாக தமிழ் சமுகம் நம்பி செயற்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
இது தமிழர்களின் போட்டிக்களமாக மாற்றப்பட்டுள்ள நிலையில், தமிழர்கள் யாருடன் போட்டிப்போட வேண்டுமென்பதினை தற்போது மறந்து செயற்படுவதாகவும் கனடாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,