நடிகை திஷா பாட்னி
பாலிவுட் சினிமாவில் எம்.எஸ். தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் எம்.எஸ். தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி.

இந்த படத்தில் தோனியின் முதல் காதலி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்ளின் மனதை கவர்ந்தவர் நடிகை திஷா பாட்னி. இதன்பின் இவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்த நிலையில், படங்களை தாண்டி இவருடைய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வந்தது.
இந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த கல்கி படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கு ஸ்கோப் அதிகமாக இல்லை.

திஷா எப்போது தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கங்குவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என தகவல் வெளியானது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மூலம் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.
திஷா பாட்னி வாங்கிய சம்பளம்
இப்படத்தில் சூர்யா, திஷா பாட்னி, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், கங்குவா படத்தில் நடிப்பதற்காக நடிகை திஷா பாட்னி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக திஷா பாட்னி ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Source: https://cineulagam.com/article/disha-patani-salary-for-acting-in-kanguva-movie-1731488242

