சசிகுமார்
திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார் சசிகுமார். பாலாவிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து பின் சுப்ரமணியபுரம் என்ற படத்தை இயக்கியும், நடித்தும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இந்த படத்தின் வெற்றிக்கு பின் நாடோடிகள், போராளி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பிரம்மன், உடன்பிறப்பே, எம்ஜிஆர் மகன், அயோத்தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் இவர் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சசிகுமார் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


விஜய்யின் ஜனநாயகன் படம் குறித்து நடிகை பிரியாமணி கொடுத்த அதிரடி அப்டேட்.. சம்பவம் லோடிங்
அந்த வார்த்தை
அதில், ” படம் சூப்பர் என யார் சொன்னாலும் மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் என்று சொன்னால், சந்தோசத்திற்கு அளவே இல்லை.
‘தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க.. சொல்ல வார்த்தையே இல்லை, அந்த அளவிற்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க. சமீப காலமா உங்களோட கதைத் தேர்வு மிகவும் நன்றாக உள்ளது’ என்று ரஜினி சார் சொல்லும்போது மனம் பெரும் மகிழ்ச்சி அடைந்தது” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
#TouristFamily #SuperStar #Rajinikanth sirrr 😍🤗 pic.twitter.com/jzYvGe5XlR
— M.Sasikumar (@SasikumarDir) May 16, 2025

