முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். மாவட்டத்தில் ஊசி சின்னத்தில் போட்டியிடும் வைத்தியர் அர்ச்சுனா

யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம் என சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரு விளையாட்டு வீரனாக தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் தனக்கு உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் (14.10.2024) திங்கட்கிழமை நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வேட்புமனுத் தாக்கல் 

சாவகச்சேரி வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இராமநாதன் சுயேட்சை குழு -17 இல் ஊசி சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

யாழ். மாவட்டத்தில் ஊசி சின்னத்தில் போட்டியிடும் வைத்தியர் அர்ச்சுனா | Doctor Archana Ramanathan Contest General Election

இந்த, சுயேட்சை குழுவில் அர்ச்சுனா இராமநாதன், சிவப்பிரகாசம் மயூரன், சிவசுப்பிரமணியம் யோகபாலன், கௌசல்யா நரேந்திரன், இராமகிருஷ்ணா அறிவன்பன், பத்மலோஜினி நவரத்தினம், தம்பிஜயா கிருஷ்ணானந், சிறிகண்ணன் சிறிபிரகாஷ் மற்றும் பவித்திரா கிருபானந்தமூர்த்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதேவேளை, நாடாளுமன்ற தேர்தலில் இம்முறை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 44 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் களமிறங்கவுள்ளன. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக யாழ்ப்பாண (Jaffna) தேர்தல் மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் சுயேட்சைக் குழுக்களின் 2 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கைத் தமிழரசுக்கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, கே.வி.தவராசா தலைமையிலான அணி மற்றும் அங்கஜன் இராமநாதன் முதலிய 46 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.