அமெரிக்கா விதித்துள்ள வரிகள் தொடர்பாக அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அலுவலகத்துடன் மற்றுமொரு கலந்துரையாடல் இன்றையதினம் இடம்பெறும் என பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இரவு இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ட்ரம்பிற்கு சென்ற தகவல்
நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்று வரும் அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த மேலும் சுட்டிக்காட்டினார்.
வெள்ளை மாளிகையும் ஜனாதிபதி அனுப்பிய கடிதத்தை அங்கீகரித்துள்ளதாக பிரதி
அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்: இந்ரஜித்