முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்!

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் மற்றும் இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரும் குற்றவியல் சட்டத்தின் கீழ் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள் என அந்த கட்சியின் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.   

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் இன்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்துள்ளனர்.

கட்சியின் அறிக்கை

இதன் போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது தொடர்பான கட்சியின் 7 அம்ச அறிக்கையை கையளிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்! | Easter Attack Bomb Blast Sl Jvp Statement Cardinal

ரஷ்ய இராணுவத்தில் வேலைவாய்ப்பு! மோசடியில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கைது

ரஷ்ய இராணுவத்தில் வேலைவாய்ப்பு! மோசடியில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கைது

இதனை தொடர்ந்து உரையாற்றிய கட்சியின் சட்டத்தரணி சுனில் வட்டகல, ”இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தரப்பினரை இத்தருணம் நான் நினைவு கூறுகிறேன்.

பாதுகாக்கப்படும் குற்றவாளிகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை கண்டறிந்து ஆட்சியில் உள்ள தரப்பினர் அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பார்கள் என இதுவரை காலம் காத்திருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! எழுத்து மூல உறுதியை வழங்கிய சஜித் தரப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! எழுத்து மூல உறுதியை வழங்கிய சஜித் தரப்பு

அத்துடன், குற்றவாளிகள் அடையாளங்காணப்படவில்லை.  இந்த தாக்குதலின் குற்றவாளிகள் மற்றும் பிரதான சூத்திரதாரிகள் உயர்மட்ட அரசியல் சக்திகளினால் பாதுகாக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தமது கட்சியின் ஆட்சியில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.