உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாதம் அல்லது
இரண்டு மாதங்களுக்குள் நீதி வழங்குவது சாத்தியமில்லை என்று அரசாங்கம்
அறிவித்துள்ளது.
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன நாடாளுமன்றத்தில்,
இதனை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாதம் அல்லது
இரண்டு மாதங்களுக்குள் நீதி வழங்குவது சாத்தியமில்லை.
தாம், அரசாங்கத்தை பொறுப்பேற்ற பிறகுதான் இந்த உண்மையைப் புரிந்துகொண்டதாக
அமைச்சர் கூறியுள்ளார்.
ஞாயிறு தாக்குதல்கள்
இருப்பினும், இந்த மாதம் ஏதாவது ஒன்றை செய்ய, முடிந்த அனைத்தையும் செய்ய
முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நிர்வாகம் உட்பட யாராலும்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையைக் கண்டுபிடிக்க
முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியுடன் உணவருந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்,
ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து எதனையும் செய்ய அவரை
வலியுறுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

