ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.
அதாவது, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாகனங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள், வாசகங்கள், சின்னங்கள், புகைப்படங்கள், கொடிகளை உடனடியாக அகற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
முக்கிய வேண்டுகோள்
இந்த விடயம்தொடர்பில் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு காவல்துறையினருக்கு மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க செல்லுபடியாகும் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தற்காலிக வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.