எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சுயேட்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக 17 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தேர்தல் சின்னம்
இதற்கமைய, ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) எரிவாயு சிலிண்டர் சின்னத்திலும், சரத் கீர்த்தி ரத்ன கால்பந்து சின்னத்திலும், கே.கே.பியதாஸ கெல்குலேட்டர் சின்னத்திலும், ஆனந்த குலரத்ன பதக்கம் சின்னத்தையு
அக்மீமன தயாரத்ன தேரர் கரும்பலகை சின்னத்திலும், சிறிபால அமரசிங்க டயர் சின்னத்திலும், சரத் பொன்சேகா அரிக்கன் லாம்பு, அன்டனி விக்டர் பெரேரா மோட்டார் சைக்கிள் சின்னத்திலும் போட்டியிடவுள்ளனர்.
ஐதுருஸ் முஹம்மது இல்யாஸ் ஊசி மருந்து சின்னத்திலும், மானகே பேமசிறி மூக்குக்கண்ணாடி சின்னத்திலும், அனுர சிட்னி ஜயவர்தன பலாப்பழம் சின்னத்திலும், டீ.எம்.பண்டாரநாயக்க மேசை விசிறி சின்னத்திலும், எம்.திலகராஜா இறகு சின்னத்திலும் போட்டியிடவுள்ளனர்.
ரொஷான் ரணசிங்க கிரிக்கெட் மட்டைசின்னத்திலும், பா.அரியநேத்திரன் சங்கு சின்னத்திலும், சமிந்த அனுருத்த குதிரை லாடம் சின்னத்திலும், அஜந்த த சொய்சா அன்னாசிப்பழம் சின்னத்திலும் அடிப்படையாக கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.