ஆபிரிக்காவின் (Africa) – காங்கோவில் பரவிய குரங்கு அம்மை வைரஸின் (MPox) மாறுபட்ட திரிபு 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியதையடுத்து உலக சுகாதார அமைப்பு (World Health Organization) அவசர நிலையை அறிவித்துள்ளது.
2024ல் ஆபிரிக்காவில் மட்டும், குரங்கு அம்மையால் இதுவரை 14,000க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 524 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட் (COVID-19) தொற்றுக்குப் பின்னா், மற்றொரு ஆபத்தான வைரஸாக குரங்கு அம்மைத் தொற்று அச்சுறுத்தி வருகின்றது.
சுகாதார அவசர நிலை
இந்நிலையில்,பாகிஸ்தான் (Pakistan), சுவீடன் (Sweden) நாடுகளில் முதல்முறையாக Mpox எனப்படும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவிலிருந்து (Saudi Arabia) சமீபத்தில் பாகிஸ்தான் திரும்பிய 34 வயதுடய நபருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது நேற்று (16) உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுவீடனில் (Sweden) ஒருவருக்கு Mpox நோய் உறுதியாகியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் விரைவில் இந்த கொடிய நோய் மாறுபாட்டின் அதிகமான பதிவுகள் உறுதி செய்யப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இதனையடுத்து ஆபிரிக்க நாடுகளில் பரவி வந்த Mpox நோய் பிற நாடுகளுக்கும் பரவலாம் என்பதால், உலகளாவிய ரீதியில் சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.