எம்புரான்
இந்திய சினிமாவில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவர் நடிப்பில் செம மாஸாக, மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி சென்ற வாரம் வெளிவந்த படம் லூசிஃபர் 2 எம்புரான்.
நடிகரும், இயக்குநருமான பிரித்விராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். 2019ம் ஆண்டு வெளிவந்து வெற்றியடைந்த லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
வசூலை வாரிக்குவிக்கும் வீர தீர சூரன்.. 8 நாட்களில் எவ்வளவு தெரியுமா
இதனால் ப்ரீ புக்கிங்கிலேயே இப்படம் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூல் செய்து, மலையாள சினிமாவில் புதிய வசூல் சாதனையை படைத்தது.
வசூல்
இந்த நிலையில் 8 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் எம்புரான் திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 8 நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 235 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும், இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.