எதிர்நீச்சல் தொடர்கிறது
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் அடுத்தடுத்து பரபரப்பின் உச்சமாக, அடுத்து என்ன நடக்கும் என்ன நடக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கும் அளவிற்கு விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது.
புரொமோ
குணசேகரன் தாக்கியதால் சீரியஸான நிலையில் ஈஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
ஆனால் அவரின் இந்த நிலைமைக்கு காரணம் யார் என்ற உண்மையை கண்டுபிடிக்க ஜனனி போராடினாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அறிவுக்கரசியிடம் ஏதோ ஆதாரம் இருக்கிறது என்று கண்டுபிடிக்க போராட கடைசியில் ஆதாரம் குணசேகரன் கையில் சிக்கியுள்ளது.
இனி கதை எப்படி போகும் என யோசித்துக் கொண்டிருக்க இன்றைய எபிசோட் புரொமோவில் ஈஸ்வரி கண்விழிக்கிறார்.
இன்னொரு பக்கம் ஈஸ்வரி இருந்தால் தானே பிரச்சனை அவரை முடித்துவிட்டால் என கதிர் அறிவுக்கரசியிடம் கூறுகிறார்.