எதிர்நீச்சல் தொடர்கிறது
சின்னத்திரையில் மிகப்பெரிய ரீச் பெற்ற சீரியல் எதிர்நீச்சல் தொடர்கிறது. இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தற்போது பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.

பார்கவி – தர்ஷன் திருமணத்தை சுற்றி இந்த கதைக்களம் நகர்ந்து வந்த நிலையில், பல போராட்டங்களுக்கு பிறகு ஜனனி மற்றும் பெண்கள் இணைந்து பார்கவி – தர்ஷன் திருமணத்தை நடத்தி முடித்தனர்.

அதுமட்டுமின்றி ஆதி குணசேகரனின் ரகசியமும் தற்போது ஜனனி மற்றும் சக்தியிடம் சிக்கியுள்ளது. இதனால் சற்று அமைதியாகவே இருக்கிறார் ஆதி குணசேகரன்.

நடிகை பூஜா ஹெக்டேவின் 35வது பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
TRP
கடந்த சில வாரங்களில் நொடிக்கு நொடி விறுவிறுப்பாக சென்ற எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் TRP-யில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஆரம்பமாகி 39 வாரங்கள் ஆகியுள்ள நிலையில், 39வது வாரத்தின் TRP-யில் சராசரியாக 9.01 ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த 39 வாரங்களில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் TRP-யில் தொட்ட மிகப்பெரிய உச்சம் இதுவே ஆகும்.
You May Like This Video

