ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மதுவரித் திணைக்களம் (Department of Excise Sri Lanka) 88.7 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 69.3 பில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ள நிலையில் இவ்வருடத்தில் வருமானம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்
கடந்த வருடம்
இந்த நிலையில், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 19 பில்லியன் ரூபாய் வரையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வருடத்தின் முதல் ஐந்து மாத இறுதிக்குள் 91.2 பில்லியன் ரூபாயை வரி வருவாயாகப் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த இலக்கில் இதுவரை 98 சதவீதம் எட்டியுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
வலுப்பெற்று வரும் இலங்கை பொருளாதாரம் : சர்வதேச நாணய நிதியம் பாராட்டு
44,430 வாகனங்கள் சந்தைக்கு இறக்குமதி: அமைச்சர் வெளியிட்ட தகவல்