யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் 10 வயது
மகளை பல நாட்களாக தவறான முறையில் தொந்தரவு செய்த தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை, இன்றையதினம் (04.09.2024) இளவாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர் பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி
வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
இந்நிலையில், தனது மகளை பல நாட்களாக இவர் துன்புறுத்தி
வந்துள்ளார்.
இது குறித்து இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு
செய்யப்பட்டதன் அடிப்படையில் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன்,
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.