முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சமநிலையில் முடிந்த கனடா – போஸ்னியா இடையேயான FIFA உலகக் கிண்ண போட்டி

ஃபிஃபா 2026(FIFA 2026)உலகக் கோப்பையின், கனடா அணிக்கும் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணிக்கும் இடையிலான போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் ஆட்டத்தை முடித்துக்கொண்டன.

இதுவரை விளையாடியுள்ள ‘பி’ குழுவில், இரு அணிகளும் தலா ஒரு புள்ளியுடன் சமநிலையில் உள்ளன. உலகக் கோப்பையில் கனடா தனது முதல் வெற்றிக்காக இன்னும் காத்துக்கொண்டிருக்கிறது.

1 – 1 என்ற சமநிலை ஆட்டம்

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா சார்பில் முதல் கோலை 21-வது நிமிடத்தில் ஜோவோ லுகிச் பெற்றுக்கொடுத்தார்.

சமநிலையில் முடிந்த கனடா - போஸ்னியா இடையேயான FIFA உலகக் கிண்ண போட்டி | Fifa World Cup Match Canada And Bosnia Draw

விருவிருப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இதனை தொடர்ந்து ஆரம்பமான இரண்டாம் பாதியில் ஆட்டம் தொடங்கிய 79-வது நிமிடத்தில் கனடா வீரர் சைல் லாரின் அணிக்கான கோலை பெற்றுக்கொடுத்து போட்டியை 1 – 1 என சமநிலை படுத்தினார்.

இரு நாடுகளும் இதற்கு முன்பு சர்வதேச கால்பந்தில் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டதில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த “பிளேஆஃப்” தகுதிச்சுற்று இறுதிப் போட்டியில், 65-வது இடத்தில் உள்ள போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா அணி, 12-வது இடத்தில் உள்ள இத்தாலியை பெனால்டி கிக்ஸ் மூலம் அதிர்ச்சிக்குள்ளாக்கி வெளியேற்றியது.

கனடாவின் ஆட்டம்

FIFA தரவரிசையில் 30வது இடத்தில் உள்ள கனடா , இப்போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்று என்பதால் தானாகவே தகுதி பெற்றுள்ளது.

சமநிலையில் முடிந்த கனடா - போஸ்னியா இடையேயான FIFA உலகக் கிண்ண போட்டி | Fifa World Cup Match Canada And Bosnia Draw

கனடா 1986 மற்றும் 2022 உலகக் கோப்பைகளில் பங்கேற்றது, ஆனால் ஒரு ஆட்டம்கூட சமனில் முடியாமல், ஆடிய ஆறு போட்டிகளிலும் தோல்வியடைந்தது.

1986-ல் அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை, மேலும் 2022-ல் மூன்று ஆட்டங்களில் இரண்டு கோல்களை மட்டுமே அடித்தது.

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, 2014 ரியோ டி ஜெனிரோ உலகக் கோப்பையில் மட்டுமே போட்டியிட்டு, ஈரானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

ஆனால் இறுதியில் அர்ஜென்டினா மற்றும் நைஜீரியாவிடம் தோல்வியடைந்தது.

Source: https://ibctamil.com/article/fifa-world-cup-match-canada-and-bosnia-draw-1781320445

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.