படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கிடைக்க போராட வேண்டும் என சிவில் சமூக
செயற்பாட்டாளர் கலாநிதி ராமநாதன் ஸ்ரீ ஞானேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் கடந்த (12) ஆம் திகதி இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின்
வழக்கு அறிக்கை வெளியீடு நிகழ்வின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே
இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர்
பூட்ரோஸ் காளி ஐந்து பேர் கொண்ட குழுவின் அறிக்கையினை கோரிய போது குறித்த
அறிக்கையில் ஒரு இனத்தின் தனி மனிதனை முக்கியமாக தேர்ந்தெடுத்து கொள்வதும்
இனப்படுகொலையாகும் என கூறப்பட்டிருந்தது.
விசாரணை
ஒரு இனத்தின் முக்கியமானவர்களை
தனித் தனியாக தேர்ந்தெடுத்து செய்வது இனப்படுகொலையாகத்தான் கருத
வேண்டும்.

இனப்படுகொலைக்கான சட்டமும் இனப்படுகொலைக்கான நீதியும் அவர்களுக்கு
உரித்தானது என்பது தவிர்க்க முடியாத பிரயோகத்திற்குள் வருகின்றது.
இந்த உலகத்தில் நாங்கள் பன்னாட்டு
சட்டத்தை எங்களுக்காக செயற்பட வைக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் சுயநிர்ணய
உரிமைக்காக ஏதோ ஒரு வழியில் போராட தலைப்பட்டவர்களாக போராட முன்வருபவர்களாக
இருந்தால் மட்டுமே தமிழினம் பன்னாட்டு விசாரணையை கோருவதற்கான ஆகக் குறைந்த
தகுதியை கொண்டிருக்கின்றது.
நீதி
ஆகவே இவ்வாறான போராட்டங்கள் மரணித்தவர்களை
கொல்லப்பட்டவர்களை, இனப்படுகொலைக்கு உள்ளானவர்களை நாங்கள் நினைவேந்துகின்ற இந்த
போராட்டங்கள் கூட ஒரு இனத்தின் தன்னாட்சி சுய நிர்ணய உரிமைக்கான போராட்டமாக
கருதப்படுவதோடு அதன் ஊடாகவே நாங்கள் பன்னாட்டு சட்டத்தை எங்கள் மீது
பிரயோகிக்கத்தக்க வலுக்கொண்டவர்களாக மாற்றுவதற்கான இந்த முயற்சியின் ஒரு
படியினை நாங்கள் இங்கு தாண்டுகின்றோம்.

இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத் தமிழ்
ஊடகவியலாளர்களை நாங்கள் என்றென்றைக்கும் நினைவு கொள்வோம் என்றும்
இனப்படுகொலைக்கான நியாயத்தை வேண்டி போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

