Courtesy: Sivaa Mayuri
இதுவரை, தமது சொத்துக்கள் மற்றும் கடன்கள் தொடர்பான பிரகடனங்களை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த மாதத்திற்குள், சமர்ப்பிக்க வேண்டும் என இறுதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு, இந்த இறுதி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு இது தொடர்பில், ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளது.
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்
அதில், இதுவரையில் தமது சொத்துக்கள் மற்றும் கடன் பிரகடனங்களை கையளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பெயர் பட்டியலை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனங்களை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அத்தகைய பிரகடனங்களை ஜனாதிபதியின் செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புகளைச் சமர்ப்பிக்காதவர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு கூடுதல் கட்டணம் விதிக்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.