நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு, கல்லாற்றில் கூட்டுறவு சங்கத்துக்கட்டிடம் நிர்மானிக்க 50 இலச்சம் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் கட்டிடமே கட்டி முடிக்காமல் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்ரனிசில் ராஜ்குமார் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் திணைக்களம் இலஞ்ச ஊழில் ஓழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இரா.சாணக்கியன்
“நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கப்பட்ட விசேட நிதி 400
மில்லியன் ரூபாவினால் 65 ஆயிரம் வாக்குகளை பெற்றாரே தவிர உண்மையான வெற்றி அல்ல.
மட்டக்களப்பில் அபிவிருத்திக்காக 25.07.2024 நாடாளுமன்ற உறுப்பினர்
இரா.சாணக்கியனுக்கு விசேட நிதியாக 400 மில்லியன் ரூபாவம் வரவு செலவு
திட்டத்தில் 5 கோடி ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட நிதி
ஒதுக்கப்பட்டதிலே மட்டக்களப்பு, கல்குடா தேர்தல் தொகுதி புறக்கணிக்கப்
பட்டுள்ளது
மட்டக்களப்பில் வறுமை ஒழிக்கப்படவேண்டும் மற்றும் அடிப்படை வசதி இல்லாத மக்கள்
அதிகமாக இருக்கின்றனர் இவர்கள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டு பட்டிருப்பு
தேர்தல் தொகுதியை முன்னிலைப்படுத்தி பெருவாரியான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த
நிதி தேர்தலுக்கு அண்டிய காலத்திலும் அதன் பின்னரும் கட்டம் கட்டமாக
வழங்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகம்
இதில், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு
வழங்கப்பட்ட தொகை 10 கோடியே 6 இலச்சம் ரூபா, வெல்லாவெளி பிரதேச செயலகப்
பிரிவிலுள்ள பிரதேசங்களுக்கு 10 கோடி 20 இலச்சத்து 20 ஆயிரம் ரூபா,
மட்டக்களப்பு தொகுதிக்கு 4 கோடியே 44 இலச்சம் ரூபா ஓதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பட்டிருப்பு தொகுதியை முன்னிலைப்படுத்தி அனைத்து இந்து கிறிஸ்தவ ஆலையங்கள்
விளையாட்டு மைதானங்கள், மயானங்கள், மற்றும் பொது அமைப்புகளுக்கு பெரும்
தொகையான நிதி வழங்கப்பட்டுள்ளதுடன் கல்குடா ,மட்டக்களப்பு தொகுதிகளுக்கு மிக
சிறிய தொகையை வழங்கி மிக புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதுடன் ஒதுக்கப்படும்
நிதிகள் தேவையானவற்றுக்கு ஒதுக்கப்படாமல் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது இதனை
வன்மையாக கண்டிக்கின்றோம்’’ என தெரிவித்துள்ளார்.