வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்தானது இன்று (5) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் எக்ஸ்ரே இயந்திர அறையினுள் மின்னொழுக்கு காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
திடீர் தீப்பரவலினால் எக்ஸ்ரே இயந்திரத்தின் துணைக்கருவிகள் மற்றும் கணினி தொகுதி உட்பட குளிரூட்டியும் முற்றிலுமாக எரிந்து சேதமாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




