நாட்டில் துப்பாக்கி கலாசாரம் என்பது பாதாள உலகம் கோஸ்டிகளின்
சம்பந்தப்பட்டவர்களின் நடவடிக்கையாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குற்ற செயல்களுக்கு பின்னாலும் ஒவ்வொரு கடந்த கால அரசியல்வாதிகள்
தொடர்புகள் இருக்கின்றனதனை காண்கின்றோம் எனவும் கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும்
தெரிவிக்கையில்,
நாட்டில் துப்பாக்கி கலாசாரம்
”நாட்டில் துப்பாக்கி கலாசாரம் என்பது பாதாள உலகம் கோஸ்டிகளின்
சம்பந்தப்பட்டவர்களின் நடவடிக்கையாக தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு குற்ற செயல்களுக்கு பின்னாலும் ஒவ்வொரு கடந்த கால அரசியல்வாதிகள்
தொடர்புகள் இருக்கின்றனதனை காண்கின்றோம்.
அதேபோன்று அதற்கான சட்ட நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றோம். அதற்காக பலபேர் கைது செய்யப்பட்டு
கொண்டிருக்கின்றார்கள்.
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன அந்த
வகையில் சட்டத்தின் பிரகாரம் அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல்
மேலும், உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின்படி வடகிழக்கைப் பொறுத்தவரையில் எமக்கு
நாம் இரண்டாம் நிலையில் இருக்கின்ற கட்சியாக தான் நாம் இருக்கின்றோம்.

பல
கட்சிகள் எம்முடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டு
இருக்கின்றார்கள்.
நாங்கள் இதுவரைக்கும் எந்தவித முயற்சிகளையும் நாங்கள்
மேற்கொள்ளவில்லை. ஆனாலும் மற்றைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதில் எந்த
அபிப்பிராயங்களும் இல்லை. ஆனால் மக்களின் தேவை எதுவாக இருக்குமாக இருந்தாலும்
அந்த தேவைகளின் படி நாங்கள் பயணிப்பதில் நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்றார்.

